Tuesday, June 3, 2008

அன்னை

அவள் கண் அசைந்தால் கருணை வெள்ளம்
அவள் நா அசைந்தால் அன்பின் பெருக்கு
அவள் கை அசைந்தால் பாசத்தின் அணைப்பு
அவள் அசையவில்லை இறைவனடி சேர்ந்த அன்று
அசைய மறுக்கிறது என் உலகம் அன்னையில்லாமல்

Thursday, January 17, 2008

நிழல் வண்ணங்கள்

கோடி அழகை கொட்டி செய்த பதுமையே
பாரதி கனவு கண்டு பாடிய புதுமையே
உன் நிழலின் வண்ணங்களும் அருமையே


(நிழல் எப்போதும் கருமை தானே அதில் வண்ணங்கள் காண்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு விடை தேடி ஒரு skit )

பாண்டிய மன்னன் நெடுஞசெழியன் ராணி கோப்பெருந்தேவியின் நிழலில் வண்ணங்களைக் கண்டு இது சாத்தியமா என்று குழம்புகிறான். மன்னனின் சந்தேகத்தை பாட்டின் மூலம் தீர்க்கும் புலவருக்கு பொற்கிழி அளிக்கப் படும் என்று பறை அறிவிக்கப்படுகிறது.

பாண்டிய மன்னன் அரசவை.

காவலர்: மன்னா தருமி என்ற புலவர் தங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் பாட்டுடன்
வந்துள்ளார்

நெடுஞசெழியன்: மிக்க மகிழ்ச்சி புலவரே உமது பாட்டைக் கூறி பரிசு பெற்று செல்லும்

தருமி: Beauty lies in the eyes of the beholder அவ்வளவு தான்

சிவ பெருமான் நெடுங்செழியனுக்கு பாட்டின் அர்த்தத்தை உணர்த்தவே

நெடுஞசெழியன்: ஆஹா அற்புதமான பாட்டு என் சந்தேகம் நீங்கியது யார் அங்கே பொற்கிழி எடுத்து வாருங்கள்

அவையின் மூத்த புலவரான நக்கீரர் இதை தடுக்கிறார்

நக்கீரர்: மன்னா சற்று பொருங்கள் புலவரே இந்த பக்கம் வருகிறீர்களா?

நக்கீரர்: பாட்டின் அர்த்தத்தைக் கூறி பிறகு பரிசு பெற்று செல்லுங்கள் உமது பாட்டில்
பிழை இருக்கிறது

தருமி: அதனாலென்ன எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி கழித்துக் கொண்டு மீதி பரிசு தொகையை கொடுங்கள்

நக்கீரரின் பேச்சைக் கேட்ட சிவ பெருமான் கோபமடைந்து அங்கு ஒரு புலவரைப் போல் பிரசன்னமாகிறார்

சிவ பெருமான்: நக்கீரரே எமது பாட்டில் என்ன பிழை கண்டீர்?
பாட்டின் பிழை என்று கூறும் நக்கீரரே,மங்கையரின் நிழலில் வண்ணங்கள் தோன்றுவது சாத்தியமா இல்லையா?

நக்கீரர்: மங்கையரின் நிழலில் வண்ணங்கள் தோன்றுவது ஒருக்காலும் இல்லை

சிவபெருமான் உக்கிரமாகி: நீர் தினம் வணங்கும் பரம்பொருள் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது சாத்தியமென்றால் அவரின் ஒரு பாதி உமையவளின் நிழலிலும் வண்ணங்கள் தெரியாது என்று கூறுகிறீரா?

நக்கீரர் வந்திருப்பது சிவ பெருமான் என்று உணர்ந்தாலும்: நீரே முக்கண் முதல்வராகுக. உமது நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

சிவபெருமான் நக்கீரரை எரித்து பின் அவரை பொற்றாமரைக் குளத்திலிருந்து வரவைத்து தடுத்தாட் கொண்டார். நக்கீரரும் அழகான மங்கையரின் நிழலில் வண்ணங்கள் தெரிவது சாத்தியமே என்று ஒப்புக் கொண்டார்